Advertisment

சர்ச்சையான அவசரச் சட்டம்... பாதியில் நிறுத்திய கேரளா முதல்வர்...

kerala hold back 118a amendment

Advertisment

கடும் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கேரள மாநிலத்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட காவல்துறை சட்டப் பிரிவு 118ஏ அமல்படுத்துவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளைப் பரப்புவது அல்லது அவதூறு தகவலை உண்மைத்தன்மை பற்றி ஆராயாமல் அடுத்தவர்களிடம் பகிர்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கைது செய்யவும், அவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதமும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையும் வழங்கும் வகையிலும் காவல்துறை சட்டப் பிரிவு 118ஏ என்ற அவசரச்சட்டத்தைக் கேரளா கொண்டுவந்தது. ஆனால் இந்த சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளேயே எதிர்ப்பு எழுந்த சூழலில், இந்த சட்டத்தை அமல்படுத்துவதை நிறுத்திவைப்பதாகக் கேரள அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று நடைபெற்ற சிபிஐ கட்சியின் மாநில செயலகக் கூட்டத்தில் பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், "காவல்துறையினருக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் அவசரச் சட்டத்தில் திருத்தம் அறிவிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பிலிருந்து வெவ்வேறு கருத்துகள் வெளிவந்துள்ளன. எல்.டி.எஃப்-ஐ ஆதரிப்பவர்களும், ஜனநாயகத்தின் பாதுகாப்பிற்காக நிற்பவர்களும் இந்தத் திருத்தம் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். இந்த சூழ்நிலையில், திருத்தப்பட்ட சட்டத்தைச் செயல்படுத்த அரசாங்கம் விரும்பவில்லை. மாநிலச் சட்டசபையில் விரிவான விவாதத்திற்கு பிறகும், அனைத்து தரப்பினரிடமிருந்தும் கருத்துகளைக் கேட்ட பின் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என அவர் தெரிவித்துள்ளார்.

Kerala Pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe