Skip to main content

மருத்துவர்களின் பரிந்துரைபடி மது வழங்க கேரள உயர்நீதிமன்றம் தடை!

Published on 02/04/2020 | Edited on 02/04/2020

கரோனா தொற்றின் ஒரு பகுதியாக சமூக விலகலைக் கடைப்பிடிக்கிற வகையில், குறிப்பாகக் கூட்டம் கூடும் மதுக்கடைகள், பார்களுக்குத் தடை போடப்பட்டது. தமிழகம் மற்றும் கேரளா இரு மாநிலங்களிலும் மதுக்கடைகள் இழுத்து மூடப்பட்டுள்ளன. இப்படி மதுக்கடைகள் மூடப்பட்டதால், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு, கள்ளத்தனமாக சப்ளை செய்யப்படும் நிலை பெருகிவிட, அவைகளும் கேரள காவல்துறையால் தடுக்கப்பட்டுவிட்டது. இதுபோன்று பல்வேறு கடும் நடவடிக்கைகளால் மது சப்ளை நிறுத்தப்பட, குடித்தே பழக்கமாகி, அதற்கு அடிமையாகி உடல் முழுக்க ஆல்கஹாலால் ஆக்கிரமிக்கப்பட்டவர்களால் குடிக்காமல் இருக்க முடியவில்லை. மது கிடைக்காமல் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மன உளைச்சல், மன அழுத்தம் காரணமாக கேரளாவில் மட்டும் 5 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
 

ui



மேலும் இது போன்ற மனநிலையில் உள்ளவர்களின் நிலையைக் கருத்தில் கொண்ட முதல்வர் பினராயி விஜயன் மதுவுக்கு அடிமையானவர்களுக்கு டாக்டர்களின் அறிவுரைப்படி மது வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு கவுன்சிலிங் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றும் கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். தற்போது முதல்வரின் இந்த உத்தரவுக்கு கேரள மாநில உயர்நீதிமன்றம் இடைக்கால தடை பிறப்பித்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்