/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/art-img-kerala-high-court.jpg)
கேரள மாநிலம்திருச்சூர்மாவட்டத்தில் உள்ள கோழலாளியில் தனது மனைவி மற்றும் 17 வயது மகளோடுவசித்து வருபவர் பிரதிஷ். இந்நிலையில்உடல்நலம்பாதித்திருந்த பிரிதிஷ்க்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.மேலும் அவர் உடலுக்கு ஏற்ற பொருத்தமான கல்லீரலைப் பொறுத்த முயற்சி செய்து அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வட்டாரத்தில் மருத்துவ பரிசோதனை செய்தனர். அப்போது யாருடைய கல்லீரலும்பிரதிஷ்உடலுக்கு ஒத்துப்போகவில்லை. அவரின்மகளின் கல்லீரல்மட்டுமே பிரதிஷின் உடல் ஏற்றுக்கொள்ளும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அறிந்த அந்த 17 வயது சிறுமி தனது கல்லீரலின் ஒரு பகுதியைத்தனது தந்தைக்கு தானம் செய்ய முன்வந்தார். ஆனால்அவர் மைனராக இருப்பதால்உறுப்பு மாற்று சிகிச்சைக்கான சட்டத்தின் படி உறுப்பு தானம் செய்பவரின் வயது 18க்கு மேல் இருக்க வேண்டும்என்பதால் மருத்துவர்கள் இந்த உறுப்பு மாற்று சிகிச்சையை செய்ய மறுத்து விட்டனர்.
இந்நிலையில் அந்த மாணவி கேரள உயர்நீதிமன்றத்தில்தனது தந்தையின் உயிரைக் காப்பாற்றத்தனதுகல்லீரலைதானம் செய்ய தனக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், கல்லீரலைத்தானம் செய்ய சிறுமிக்கு அனுமதி வழங்கியது. மேலும் தந்தையின் உயிரைக் காப்பாற்ற தனது கல்லீரலைதானம் செய்ய முன்வந்த அந்த சிறுமியை நீதிமன்றம்பாராட்டுவதாக நீதிபதி தெரிவித்தார். இவரை மகளாகப் பெற்ற இவரின் பெற்றோர் கொடுத்து வைத்தவர்கள் என்றும் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)