d

பிரபல நடிகை கேரளாவில் ஓடும் காரில் கடத்தி கொலை செய்யப்பட்டார். அதை கடத்தல்காரர்கள் தங்களது செல்போனில் படம்பிடித்தனர். பல்சர் சுனில் கொடுத்த வாக்குமூலத்தில் அடிப்படையில் நடிகைகடத்தலில் மூளையாக செயல்பட்டதாக பிரபல மலையாள நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் வெளியே உள்ளார்.

Advertisment

நடிகையின் பலாத்கார காட்சிகள் அடங்கிய மெமரிகார்டு கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த மெமரி கார்டை தன்னிடம் ஒப்படைக்கக்கோரி கேரள ஐகோர்ட்டில் திலீபு மனு தாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

Advertisment

இந்த மனு மீதான விசாரணைக்கு பின்னர் தீர்ப்பு கூறப்பட்டது. அதில், நடிகையின் பலாத்கார காட்சி அடங்கிய மெமெரி கார்டை திலீப்பிடம் வழங்க முடியாது. அதே சமயம் தனி நபரின் உரிமை பாதிக்கப்பட கூடாது என்பதை கருத்தில் கொண்டு அந்த வீடியோ காட்சியை பார்க்க நடிகர் திலீப்புக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.