kerala

கேரளாவில், அண்மையில் வரதட்சணை கொடுமையால் அடுத்தடுத்து இளம்பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து வரதட்சணை முறைக்கு எதிராக கேரளாவின் பல்வேறு தரப்பினரும் குரலெழுப்பினர். இந்நிலையில் வரதட்சணை கொடுமையைத் தடுக்க கேரள அரசு, புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்த புதிய விதிமுறையின்படி, கேரள அரசு ஊழியர்கள் தங்களுக்கு திருமணமான ஒரு மாதத்திற்குள், தாங்கள் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை என தங்களது தந்தை, மனைவி, மாமனார் ஆகியோரின் கையெழுத்தோடு பிரமாண பத்திரத்தை தங்களது துறை உயர் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

Advertisment

ஒருவேளை இந்த விதிமுறையைப் பின்பற்றத் தவறினால், அந்த அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியாகவும் சட்டப்படியும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.