கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த சூழலில், கடந்த சில தினங்களாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதில் மக்கள் களப் பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள், அரசு ஊழியர்கள், அமைச்சர்கள் ஆகியோருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்தவகையில், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த அவரது ட்விட்டர் பதிவில், ஆளுநர் ஆரிப் முகமது கான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும், எனவே அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் விரைவில் சோதனை செய்துகொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.