ADVERTISEMENT

உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் கேரள மாநில ஆளுநர்!

11:19 AM Jul 14, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரளாவில் சமீபத்தில் வரதட்சணை கொடுமையால் நடந்த இளம்பெண்களின் மரணங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இதனையடுத்து வரதட்சணை முறைக்கு எதிராக பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பினர். இந்தநிலையில், வரதட்சணை வழங்குவது மற்றும் பெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வரதட்சணைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கேரளாவில் இன்று (14.07.2021) ஒருநாள் உண்ணாவிரதம் நடைபெறுகிறது.

கேரளாவைச் சேர்ந்த காந்திய அமைப்பும், வேறு சில அமைப்புகளும் இந்த உண்ணாவிரதத்தை ஏற்பாடு செய்துள்ளன. மாலை 6 மணிவரை நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டுள்ளார். கேரள ஆளுநர் மாளிகையில் அவர் தற்போது உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுவருகிறார்.

தற்போது உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ள கேரள ஆளுநர், மாலை 4.30 மணியளவில் காந்தி பவனில் நடைபெறும் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT