kerala government to take care of medical expenses of flight crash sufferers

கேரள விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Advertisment

துபாயிலிருந்து 191 பேருடன் கேரளா வந்த விமானம் தரையிறங்கும் போது, விபத்துக்குள்ளாகிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் துபாயில் சிக்கியிருந்த இந்தியர்களைத் தாயகம் அழைத்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இரவு கோழிக்கோடு கரிப்பூர் டேபிள் டாப் விமான நிலையத்தில் தரையிறங்க முற்பட்டது. அப்போது, ஓடுதளத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த அந்த விமானம் திடீர் விபத்துக்கு உள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 2 விமானிகள் உள்பட 19 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்திருந்த நிலையில், கேரள அரசு சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார். மேலும் விமான விபத்தில் காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவைக் கேரள அரசே ஏற்கும் எனவும், விமான விபத்தில் உயிரிழந்த ஒருவருக்குக் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ள காரணத்தால் மீட்புப் பணியில் ஈடுபட்டவர்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.