“இந்தியாவின் மொத்தக் கடனில் 60% மத்திய அரசினுடையது” - கேரளா அரசு தகவல்

Kerala Government Information 60% of India's total debt is with central government

மாநிலங்கள் வாங்கக் கூடிய கடன் தொகைக்கு மத்திய அரசு உச்சவரம்பு விதித்துள்ளதாக கேரளா அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது, ‘கடன் வாங்கும் வரம்புகளை மத்திய அரசு குறைப்பது என்பது மாநிலத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். மேலும், நீண்ட கால பொருளாதாரத்தில் சேதத்தை ஏற்படுத்தும். இது குறுகிய காலத்திலோ அல்லது நடுத்தர காலத்திலோ கூட சரிசெய்ய முடியாததாக இருக்கும். கேரள மாநிலத்தில் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய மாநில அரசுக்கு உடனடியாக சுமார் ரூ.26,000 கோடி தேவைப்படுகிறது. இந்த நிலையில், மாநில அரசு கடன் திரட்ட மத்திய அரசு தடை விதித்திருக்கிறது.

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனை தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

அரசியலமைப்பு சட்டம், மாநிலங்களுக்கு நிதி சுயாட்சியை வழங்கியிருக்கிறது. சுதந்திரம் அடைந்த பின்னர், இத்தனை ஆண்டுகளாக மாநிலங்கள் தங்கள் பட்ஜெட்டை தயாரித்து நிர்வகிப்பதற்கு இந்த அதிகாரங்களைத் தான் பயன்படுத்தி வருகின்றன. பட்ஜெட்டை சமநிலைப்படுத்துவதற்கும், நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்டுவதற்கும், மாநிலத்தின் கடனைத்தீர்மானிப்பதற்கும் மாநிலங்களுக்கு உட்பட்டது. மேலும், தேவையான அளவிற்கு மாநிலம் கடன் வாங்காவிட்டால், குறிப்பிட்ட நிதியாண்டிற்கான மாநிலத் திட்டங்களை மாநிலத்தால் முடிக்க முடியாது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த், கே.வி. விசுவநாதன் அமர்வு முன் வந்தது. அப்போது, இந்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பேரில், இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு சார்பில் கடந்த 5 ஆம் தேதி அறிக்கை ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘கேரளா மாநிலத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இதற்கு அந்த அரசின் மோசமான நிதி நிர்வாகமே காரணம். இந்த நிலையில் தான், கேரளா அரசு சார்பில் கடன் வாங்கும் வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்றுகோரிக்கை வைத்திருக்கிறது. கேரளா அரசு, மாநில அரசின் உற்பத்தி திட்டங்கள், நலத்திட்டங்களுக்காக கடன் வாங்கவில்லை. மாநிலஅரசு ஊழியர்களின் ஊதியம், பென்ஷன், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துதல் போன்றவற்றுக்கு கடன் வாங்க முயற்சிக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கேரளா அரசு இன்று (10-02-24) உச்சநீதிமன்றத்தில், ‘இந்தியாவின் மொத்தக் கடனில் 60 சதவீதம் மத்திய அரசுடையது ஆகும். அனைத்து மாநிலங்கள் மூலம் பெரும் கடன் 40 சதவீதம் மட்டுமே. 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மத்திய மற்றும் மாநிலங்களின் மொத்தக் கடனில் 1.75% மட்டுமே கேரளா கொண்டுள்ளது. மாநிலங்களை வறுமை நிலைக்குத்தள்ளும் வகையில் மத்திய அரசின் கொள்கைகள், சட்டத் திருத்தங்கள் உள்ளன’ என்று தெரிவித்துள்ளது.

Kerala
இதையும் படியுங்கள்
Subscribe