Kerala gold theft case; 44 people including Swapna Suresh fined!

கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி துபாயிலிருந்து திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய அரபு அமீரகத்துக்கு சுமார் 15 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகள் பார்சல் மூலம் கடத்தி வரப்பட்டது. ஒரு நாட்டின் தூதரக பார்சலில் தங்கம் கடத்தப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இது தொடர்பான வழக்கில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அப்போதைய ஐக்கிய அமீரக தூதரகத்துணைச் செயலாளர் ஸ்வப்னா சுரேஷ், முதலமைச்சரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன், தூதரக முன்னாள் மக்கள் தொடர்பு அதிகாரி சரித்குமார் உள்பட 44 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், இவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முதல்வர் பினராயி விஜயனின் முதன்மைச் செயலாளராக இருந்த சிவசங்கர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது.

Advertisment

இந்த வழக்கு தொடர்பாக,தேசியப் புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, சுங்கத்துறை உள்ளிட்ட 3 தரப்பும் விசாரணை நடத்தி வருகிறது. இதில் ஸ்வப்னா சுரேஷ், சிவசங்கர் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தற்போது அவர்கள் ஜாமீனில் இருக்கின்றனர். மேலும், இது தொடர்பான வழக்கு தற்போது எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தங்கக் கடத்தல் குறித்து விசாரித்தமத்திய சுங்கத்துறை, இந்த கடத்தலில் நேரடியாக ஈடுபட்டதாக ஸ்வப்னா சுரேஷ், சரித்குமார், சந்தீப் நாயர், ரமீஸ் ஆகியோருக்கு தலா ரூ. 6 கோடி வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கருக்கு ரூ. 50 லட்சம் என இந்தக் கடத்தலில் ஈடுபட்ட 44 பேருக்கும் மொத்தம் 66.65 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என மத்திய சுங்கத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.