Kerala gold ISSUE: Two more arrested

Advertisment

கேரளாவையே உலுக்கிய தங்ககடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர்கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அதன்பின் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றகாவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவில்,அவர்களுக்கு பாதிப்பில்லை என்று வந்துள்ள நிலையில், அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்குநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில்கேரள தங்ககடத்தல் சம்பவம் தொடர்பாக மேலும் இருவரை சுங்கத்துறைகைது செய்துள்ளது. மலப்புரம் மாவட்டத்தைசேர்ந்த முகமது அன்வர், சையத் ஆலலிஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.