Advertisment

பயங்கரவாத நடவடிக்கைக்காகவே தங்கம் கடத்தப்பட்டுள்ளது!!! -என்.ஐ.ஏ. அதிரடி!! 

kerala Gold issue - NIA

கேரளாவையே உலுக்கிய தங்ககடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டதாக, தேடப்பட்டு வந்த ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் ஆகியோர்கைது செய்யப்பட்டுநீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பெங்களூரில் கைது செய்த இருவரையும் கொச்சி அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக இருவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

Advertisment

அதன்பின் ஆஜர்படுத்தப்பட்ட ஸ்வப்னா, சந்தீப் ஆகியோருக்கு 14 நாள் நீதிமன்றகாவல் விதிக்கப்பட்டது. இந்நிலையில் கரோனா பரிசோதனை முடிவில்,அவர்களுக்கு பாதிப்பில்லை என்று வந்துள்ள நிலையில், அவர்களைக் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 10 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் அம்மனுவில் என்.ஐ.ஏ. கோரிக்கை வைத்திருந்தது. இதனையடுத்து ஸ்வப்னா, சந்தீப் ஆகியோரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ.வுக்குநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்காகவே ஸ்வப்னா தங்க கடத்தலில் ஈடுபட்டதாக என்.ஐ.ஏ.குற்றம் சாட்டியுள்ளது.ஸ்வப்னாவைகாவலில் எடுக்க என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், இந்த அதிரடி குற்றச்சாட்டுவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த மனுவில், அதேபோல்தங்க கடத்தலில் ஐக்கிய அரபு அமீரக தூதரக போலி முத்திரை,சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

Kerala NIA Smuggling Swapna suresh
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe