Advertisment

ஜிமிக்கி கம்மல், பிரியா வாரியரை தொடர்ந்து கேரள மணப்பெண் வைரல்!

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கேரள பெண்கள் என்றாலே பிரேமம் கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படம், கேரளாவிற்கு இணையாக தமிழிகத்தில் ஓடியது மட்டுமல்லாமல், அந்த படத்தில் மலர் டீச்சராக வந்த சாய்பல்லவி தமிழக இளைஞர்களின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்து ஆட்சி செய்ததை இதற்கு சான்றாக கூறலாம். இதேபோல் ஜிமிக்கி கம்மல் பாடலையும், பிரியா வாரியரையும் சமூகவலைதளத்தில் தமிழக இளைஞர்கள் கொண்டாடி தீர்த்தனர்.

Advertisment

Kerala Girl - Viral video

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

கேரளாவிற்கும் தமிழக இளைஞர்களுக்கும் அப்படி ஒரு பிரிக்க முடியாத பிணைப்பு உள்ளது. இந்நிலையில் கேரளாவில் மணப்பெண் ஒருவர் திருமணத்தில் நடனமாடிக்கொண்டு மேடை ஏறும் வீடியோ, தற்போது இணையத்தை கலக்கி வருகிறது. இந்த சம்பவம் கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள உள்ள சி.ஆர். ஆடிட்டோரியத்தில் நடந்துள்ளது. இந்த வீடியோவை ட்விட்டரில் பதிவிட்ட நபர், "இது 2020-ம் ஆண்டு. இனி மணமகள்கள் திருமணத்தின் போது வெட்கப்பட மாட்டார்கள்" என குறிப்பிட்டிருப்பது, சிரிக்க வைப்பதோடு சிந்திக்கவும் வைக்கிறது. இதையும் தமிழக இளைஞர்கள் ரீட்வீட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

girl Kerala marriage viral video
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe