Advertisment

கேரளாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கொடுத்த 700கோடி.... மத்திய அரசு அனுமதி அளிக்குமா?

pinarayi vijayan

Advertisment

கேரளாவில் வரலாறு காணாத கனமழை பெய்தது. கடவுளின் தேசம் என்று சொல்லப்பட்ட கேரள தேசம் நீரால் சூழப்பட்டது. மலைகளில் இருக்கும் மண் சரிந்து நிலச்சரிவு ஏற்பட்டது. இதுவரையில் 400க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆகியுள்ளனர். 19,000கோடி வரையிலான நஷ்டம், சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். சுமார் 7 லட்சம்பேர் வீட்டை விட்டு வெளியேறி மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்படும் அளவிற்கு கேரளாவின் நிலை மாறியது.

இந்நிலையில், மத்திய அரசையும் தாண்டி கேரளாவுக்கு பலர் நிவாரணம் அளிக்க முன் வந்துள்ளனர். அப்படி முன் வந்தவர்கள்தான் ஐக்கிய அரபு அமீரகம், மாலத்தீவு போன்ற வெளிநாடுகள். ஐக்கிய அரபு அமீரகம் சுமார் 700கோடி நிதி அளிப்பதாக தெரிவித்துள்ளது. ஆனால், இது கேரளா அரசாங்கத்திற்கு கிடைக்க இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அனுமதிக்க வேண்டும். இதுவரை இந்த நிதியை அனுமதிக்கவில்லை, அனுமதிக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியா என்ற நாடு தங்களின் பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்ளும் என்ற மனநிலையை உடையது.

2004ஆம் ஆண்டில் சுனாமி ஏற்பட்டபோது அமெரிக்கா நிதி தருவதாக தெரிவித்தது. ஆனால், அப்போது பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அதனை ஒத்துக்கொள்ளவில்லை என்று சொல்கிறார்கள். தேவையை கருதி சில சமயங்களில் இந்தியா வெளிநாடுகளின் நிதியை எற்றுக்கொண்டும் இருக்கிறது. இதுவரை மத்திய அரசு கேரளாவுக்கு முதல் கட்ட நிதி உதவியாக 600 கோடி தந்திருக்கிறது. இன்னும் மத்திய அரசு வெளிநாட்டு அரசாங்கள் தருவதாக தெரிவித்த நிதிக்கு வெளியுறவுத்துறை அனுமதி கொடுக்கவில்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகத்தை சேர்ந்த வட்டாரங்கள் சொல்வதாக கூறுகின்றனர்.

kerala flood uae
இதையும் படியுங்கள்
Subscribe