kerala

கேரளாவில் இதுவரை வெள்ளத்தினாலும், வெள்ளச்சரிவினாலும் 324பேர் பலியாகி உள்ளதாக கேரளா முதல்வர் தெரிவித்துள்ளார். மேலும் மிடுப்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Advertisment

கேரளாவில் கனமழை காரணமாக 33 அணைகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 13 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

21 குழுக்களாக மீட்புக்குழுவினர்கள் பிரிந்து மீட்புப்பணியில் ஈடுபட்டுவருகின்றனர். நிறைய பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சாலைகள் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் நிவாரண பொருட்களை கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது .

Advertisment

இந்நிலையில், மீட்பு பணிகளுக்கு படகுகள் வேண்டும் என்று மீனவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர். அதற்கு அவர்களும் 100க்கும் மேற்பட்ட படகுகளை கொடுத்து உதவியுள்ளனர். வாடி, மூத்தக்காரா, நீண்டகாரா, ஆலப்பாட் மீனவ கிராம மீனவர்கள் தங்கள் படகுகளை மீட்புப் பணிகளுக்காக வழங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் பல மீனவர்களும் மீட்பு பணிக்காக களத்தில் இறங்கியுள்ளனர்.