Advertisment

5 வயது மகளை ஸ்கூட்டர் ஓட்டவைத்த தந்தைக்கு தண்டனை... 

kerala

Advertisment

கேரளாவில் தனது ஐந்து வயது குழந்தையை ஸ்கூட்டர் ஓட்ட வைத்த தந்தையின் ஓட்டுநர் உரிமம் ஒரு வருடத்திற்கு தடை விதித்துள்ளது மோட்டார் வாகனத்துறை.

கொச்சியில் உள்ள பள்ளூர்த்தி என்னும் ஊரைச் சேந்தவர் சிபு பிரான்சிஸ், இவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துள்ளார். அப்போது, அவருடைய ஐந்து வயது மகளை நின்றபடியே வண்டி ஒட்டவைத்துள்ளார். அதை அவ்வழியாக காரில் சென்றுகொண்டிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட, பின்னர் அந்த வீடியோ வைரலானது.

இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அன்று தன்னுடைய மகளை ஸ்கூட்டர் ஓட்ட வைத்ததற்காக ஷிபு பிரான்ஸின் ஓட்டுநர் உரிமம் ஓராண்டுக்கு ரத்துச் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து சிபு கூறுகையில்," நான் என் மகளை ஸ்கூட்டர் ஒட்டவைக்கவில்லை, நான் ஆக்சிலேட்டரில் இருந்து கையை எடுக்கும்போது. அவள் ஆக்சிலேட்டரை பிடித்து திருகினாள். அது வீடியோவில் பார்க்க என் மகள் ஓட்டுவது போன்று தெரிந்திருக்கிறது "என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

Advertisment

{"preview_thumbnail":"/sites/default/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/eykBbrQ55u0.jpg?itok=G92tULzT","video_url":" Video (Responsive, autoplaying)."]}

Kerala police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe