நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு இயற்கையானது அல்ல - கேரளா டி.ஜி.பி பரபரப்பு கட்டுரை...

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல, திட்டமிட்ட கொலை என கேரள டி.ஜி.பி ரிஷிராஜ் சிங் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

kerala dgp about actress sridevi case

மலையாள நாளிதழ் இன்றில் இதுகுறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ள அவர், "என் நண்பரும், தடயவியல் துறை நிபுணருமான டாக்டர் உமாதாதன் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து என்னிடம் கருத்து தெரிவித்தார். அப்போது எதேச்சையாக நீரில் மூழ்கி ஸ்ரீதேவி இறக்கவில்லை. அது கொலையாகத் தான் இருக்கும் என கூறினார். அப்படியென்றால் அது எவ்வாறுநடந்திருக்கும் என நான் கேட்டேன்.

அதற்கு பதிலளித்த அவர், ஒரு அடி ஆழம் மட்டுமே உள்ளே குளியல் தொட்டியில் மூழ்கி யாரும் இறக்க முடியாது. எவ்வளவு தான் அளவுக்கு அதிகமாக மது அருந்தினாலும் அந்த அளவு உள்ள நீரில் மூழ்க முடியாது. யாராவது அவரின் கால்களை பிடித்து, தலையை நீரில் மூழ்கடித்திருக்க வேண்டும் என்றார் உமாதாதன்." என ரிஷிராஜ் சிங் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். அவரின் இந்த கட்டுரை இந்திய திரை உலகில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Boney kapoor sridevi
இதையும் படியுங்கள்
Subscribe