Kerala declares it a disaster for Ship sinking accident

Advertisment

கேரளா மாநிலம் விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கொச்சியை நோக்கி சரக்கு கப்பல் ஒன்று சில தினங்களுக்கு முன்பு சென்று கொண்டிருந்தது. ரசாயனம் கொண்ட கன்டெய்னர்களை ஏற்றிச் சென்ற கப்பல், வேகமாக வீசிய காற்றால் கொச்சி அருகே நடுக்கடலில் திடீரென்று கவிழ்ந்தது. இதில், ரசாயனம் இருந்த கண்டெய்னர்களும் கடலுக்குள் விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். தொடர் மீட்பு பணியில் கப்பலில் இருந்த மாலுமிகள் உள்பட 24 பேர் காப்பாற்றப்பட்டனர்.

சரக்கு கப்பலில் இருந்த 640 கண்டெய்னர்களில், 13 கண்டெய்னர்களில் மிகவும் ஆபத்தான நச்சுத்தன்மை கொண்ட ரசாயணம் இருந்ததால் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டது. அந்த ரசாயணம் கடலில் கொட்டியதால் அப்பகுதி ஆபத்தான பகுதி என அறிவிக்கப்பட்டது. மேலும், 12 கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு வேதிப்பொருள் இருப்பதாகவும், இந்த கால்சியம் கார்பைடு உப்புத் தண்ணீரில் கலந்தால் acetylene என்ற வாயுவை உருவாக்கி தீப்பற்றி எரியும் தன்மை கொண்டது எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, கடலோர பகுதி மக்களுக்கும், மீனவர்களுக்கும் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், கடந்த 25ஆம் தேதி கப்பல் முழுவதும் கடலில் மூழ்கியது. கப்பலில் இருந்த 100 கண்டெய்னர்கள் வரை கடலில் மூழ்கியிருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், கடலில் கொட்டிய எரிபொருள் மற்றும் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியில் கடலோர காவல் படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisment

கப்பலில் இருந்த ரசாயனப் பொருட்கள் கடலில் பரவி வரும் நிலையில், இதனை கேரளா அரசு பேரிடராக அறிவித்துள்ளது.