kerala Court says widow cannot be evicted from her husband's house

கணவர் இறந்த பிறகும் கூட அவரது மனைவியை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது என்று கேரளா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கேரளா மாநிலத்தைச் சேர்ந்த 41 வயது பெண் ஒருவர், தனது கணவர் இறந்த பிறகு தன்னையும் தனது குழந்தைகளையும் வீட்டை வெளியேறுமாறு கட்டாயப்படுத்துவதாக மாமியார் மாமனார் மீது பாலக்காட்டில் உள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வந்த போது, அந்த பெண்ணுக்கு சாதமான தீர்ப்பை வழங்கியது.

Advertisment

இந்த தீர்ப்பை எதிர்த்து மாமியார் மாமனார் கேரளா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கு நீதிபதி எம்.பி சினேகலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறியதாவது, ‘குடும்ப வன்முறைச் சட்டத்தின் பிரிவு 17இன் கீழ், கணவர் இறந்த பிறகும் கூட குடும்ப உறவில் உள்ள ஒவ்வொரு பெண்ணும், கணவரது வீட்டில் வாழ உரிமை உண்டு. அவரை வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது’ என்று கூறினார். இதையடுத்து மாமியார், மாமனார் தரப்பில் வாதிட்டதாவது, ‘அந்த பெண்ணுக்கு வேறொரு சொத்து சொந்தமாக இருக்கிறது. கணவர் இறந்த பிறகு அந்த வீட்டில் அவர் வசிக்கவில்லை. மேலும், இனிமேல் இது குடும்ப உறவு இல்லை. அதனால், எங்கள் மீது குடும்ப வன்முறை சட்டம் பொருந்தாது’ என்று தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த நீதிமன்றம், ‘பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குழந்தைகளை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதன் மூலம் அவரது மாமியார் மாமனார் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் காட்டுகிறது. அந்த பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவதில் செஷன்ஸ் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது தான்’ என்று கூறி அவர்களின் மனுவை தள்ளுபடி செய்தது.ஆனால், மாமியார் மற்றும் அவரது குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிப்பதன் மூலம் குடும்ப வன்முறைச் செயல்களில் ஈடுபட்டதாக ஆதாரங்கள் காட்டுவதாக நீதிமன்றம் கூறியது. அந்தப் பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்குவதில் செஷன்ஸ் நீதிமன்றம் சரியானது என்று தீர்ப்பளித்து உத்தரவிட்டது.