ADVERTISEMENT

கேரளாவில் புதிய உச்சம் தொட்ட கரோனா பாதிப்பு!

07:32 PM Jul 04, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

இந்தியாவில் மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்து வருகின்றது. மராட்டியத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதேபோன்று கேரளாவில் கரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், தற்போது கணிசமான அளவு உயர்ந்து வருகின்றது.

ADVERTISEMENT

இன்று மட்டும் கேரளாவில் 240 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 5,204 பேர் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர். மொத்தமாக 2,129 மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார்கள். மாநிலம் முழுவதும் 135 ஹாட் ஸ்பாட்டுக்கள் உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 1,77,769 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் இருந்து வருவதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 200க்கும் மேற்பட்ட தொற்று பதிவு செய்யப்படுவது கேரளாவில் இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT