ADVERTISEMENT

‘எங்களால் இனி ராணுவ சீருடை தைத்துத் தரமுடியாது’ - இஸ்ரேலிடம் சீரிய கேரள நிறுவனம்

06:07 PM Oct 21, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே 10 நாட்களுக்கு மேலாக போர் நடைபெற்று வரும் நிலையில், நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. கடந்த 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்தனர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை நடத்தி வருகிறது. இப்படியாக இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனிடையே காசாவை சுற்றி வளைத்துள்ள இஸ்ரேல், அங்கு மின்சாரம், உணவு, குடிநீர் உள்ளிட்டவற்றைத் துண்டித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்கும் வரை காசாவிற்கு மின்சாரம் கிடையாது என இஸ்ரேல் எச்சரித்துள்ளது. இருப்பினும் தொடர்ந்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், கேரளாவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இஸ்ரேலுக்கு இனி ராணுவ உடை தைத்துத் தர முடியாது என்று தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே மரியன் அப்பாரல்ஸ் என்ற ஆடை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சுமார் 1500க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வரும் இந்த நிறுவனம் கத்தார், இஸ்ரேல், பிலிப்பைன்ஸ் குவைத்து ஆகிய நாடுகளுக்கு ராணுவ சீருடை தயாரித்து வழங்கி வருகிறது. இந்த நிலையில் இஸ்ரேல் ராணுவத்திற்குச் சீருடைகளை தயாரித்து வழங்க முடியாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், சுமார் இஸ்ரேலின் 1 லட்சம் சீருடைகளுக்கான ஆர்டரையும் அந்நிறுவனம் ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT