Advertisment

விபத்தில் சிக்கினார் மீன் விற்று பிரபலம் அடைந்த கேரள கல்லூரி மாணவி ஹனன்!!

கேரளாவில் மீன் விற்று கல்லூரி படிப்பை தொடர்ந்த மாணவி ஹனன் கார் விபத்தில் படுகாயமடைந்துள்ளார்.

Advertisment

கேரளாவில் தொழுப்புழாவில் வசித்துவரும் 21 வயதுடைய கல்லூரி மாணவி ஹனன் இவர் தனது ஏழ்மையான குடும்ப சூழலில் பகுதிநேரமாக மீன் வியாபாரம் செய்துகொண்டு ஒரு தனியார் கல்லூரியில் பட்டயப்படிப்பு பயின்று வருகிறார். இந்த நிலையில் கேரளாவிலுள்ள ''மாத்ருபூமி'' என்ற இதழில் அவரது வாழ்க்கை தொடரும், அவர் அன்றாட வாழ்க்கை நடைமுறை சிக்கல்கள் பற்றிய வீடியோவும் வெளியாகி பல வரவேற்புகளை பெற்று பிரபலமாவர் ஹனன்.

Advertisment

HANAN

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இவ்வாறு பிரபலமடைந்த மாணவி ஹனன் பல கல்லூரி நிகழ்ச்சிகளில் பங்குபெற்றுவந்தார். நேற்று திருச்சூர் கொடுங்கல் கல்லூரி மேடை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மாணவி ஹனன் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் கொச்சின் புறப்பட்டார். அப்போது காரின் குறுக்கே நபர் ஒருவர் சாலையை கடக்க முயற்சிக்க ஹனன் கார் டிரைவர் விபத்தை தடுக்க காரை சட்டென்று திரும்பியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் கார் மோதி விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் மாணவி ஹனனுக்கு காலிலும், முதுகெலும்பிலும் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

college student hanan hameed Kerala
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe