Skip to main content

மாணவர்களை திட்டிய நடத்துனருக்கு வித்தியாசமான தண்டனை கொடுத்த மாவட்ட ஆட்சியர்...

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

மாணவர்களிடம் கடுமையாக நடந்துக்கொண்ட தனியார் பேருந்து நடத்துநருக்கு வித்தியாசமான தண்டனை அளித்து மாவட்ட ஆட்சியர் ஒருவரின் செயல் தற்போது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

 

kerala collector gives interesting punishment to a conductor who behaved harsh with children

 

 

கேரளாவின் வழிகடவு - பரப்பனங்கடி வழியாக கொரம்பயில் எனும் தனியார் பேருந்து நடத்துனர், அதில் வரும் மாணவர்களிடம் தொடர்ந்து கடுமையாக நடந்து வந்துள்ளார். மாணவர்களை சரியான நிறுத்தத்தில் இறக்கி விடாதது, அவர்களிடம் கடுமையான சொற்களை உபயோகிப்பது என மோசமாக நடந்து வந்துள்ளார்.

ஒருநாள் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். மாணவர்கள் எவ்வளவு கூறியும் பேருந்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். இந்த விவகாரம் கல்வி அமைச்சர் வரை சென்ற நிலையில் பேருந்து நடத்துநர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று மலப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு அமைச்சர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து உடனடியாக பேருந்தை கண்டுபிடித்து, அந்த பேருந்தை பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர் பேருந்து அவருக்கு வித்தியாசமான தண்டனை ஒன்றை அளித்துள்ளார்.

அதன்படி மலப்புரத்தில் உள்ள ஒரு குழந்தைகள் காப்பகத்தில் தினமும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை அந்த பேருந்து நடத்துநர் அங்குள்ள குழந்தைகளுக்கு சேவைகளை செய்ய வேண்டும். 10 நாட்கள் தொடர்ந்து குழந்தைகளுடன் பழகி அவர்களுக்கான தேவைகளை நடத்துநர் பூர்த்திசெய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்