Advertisment

"பல நூற்றாண்டு சகோதரத்துவ அன்பை ஆழப்படுத்துவோம்" - ஸ்டாலினுக்கு பினராயி விஜயன் வாழ்த்து! 

corona

தமிழக சட்டப்பேரவைக்கு தேர்தல் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி நடந்துமுடிந்த நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த மே 2ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அத்தேர்தல் முடிவுகளின்படி, தமிழகத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை இடங்களைவென்றது. இதனைத்தொடர்ந்து ஸ்டாலின் இன்று (07.05.2021) முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

Advertisment

இதனைத்தொடர்ந்துகேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். பினராயி விஜயன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "அன்பிற்குரிய மு.க. ஸ்டாலின், தமிழக முதல்வராக நீங்கள் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொள்ளும் இந்தவேளையில், நீங்கள் பெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன். பல நூற்றாண்டுகளாக கேரள மக்களும் தமிழர்களும் பகிர்ந்துகொண்டுவரும் சகோதர அன்பை நாம் மேலும் ஆழப்படுத்துவோம் என்றும், சிறப்பான இந்தியாவிற்காக ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்றும் நம்புகிறேன்" என கூறியுள்ளார்.

Advertisment

tamilnadu cm mk stalin cm pinarayi vijayan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe