Skip to main content

98 மார்க் எடுத்த 96 வயது பாட்டிக்கு சான்றிதழ் கொடுத்த முதல்வர் பினராயி...

Published on 01/11/2018 | Edited on 01/11/2018
96 age


கேரளாவைச் சேர்ந்த 96 வயது பாட்டி, அக்‌ஷரலக்‌ஷம் எழுத்தேர்வில் 98 சதவீதம் மதிப்பெண்களைப் பெற்று அதிர்ச்சியை தந்துள்ளார்.
 

கேரளா ஆலப்புழாவைச் சேர்ந்த கார்த்தியாயினி(96 வயது) எனும் பாட்டி கேரள மாநில எழுத்தறிவு நடத்திய தேர்வில் பங்கேற்று, இந்த மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.
 

இந்த தேர்வில் வாசிக்கும் திறன், எழுத்து மற்றும் கணக்கு பாடம் இடம் பெற்றிருக்கின்றது.  இந்த பாட்டி எழுத்தில் 40 க்கு 38 மதிப்பெண்களையும், மற்ற தேர்வுகளில் முழு மதிப்பெண்ணை பெற்றுள்ளார். இத் தேர்வு முடிவுகள் நேற்று புதன் கிழமை வெளியிடப்பட்டன. 
 

இதைத் தொடர்ந்து திருவனந்தபுரத்தில் நடைபெற்ற விழாவில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், கார்த்தியாயினி பாட்டிக்கு தகுதிச் சான்றிதழ் வழங்கியுள்ளார். . பாட்டி தேர்வு எழுதுவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்