Advertisment

தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்த கேரள முதல்வர்!

Kerala Chief Minister wishes Pongal in Tamil!

தமிழர் திருநாளான பொங்கல் திருநாள் இன்று (15-01-2024) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் எனப் பலரும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடிதமிழ் மொழியில் தனது பொங்கல் வாழ்த்துகளைத்தெரிவித்தார்.

Advertisment

இந்த நிலையில், கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது பொங்கல் வாழ்த்துகளைத்தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், “அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். மண்ணைப் பொன்னாக்க அயராது உழைப்பவர்களின் வாழ்வில் எல்லா வளமும் நிறைந்திருக்கட்டும். கோடான கோடி மக்களோடு சேர்ந்து நாங்களும் இந்த அறுவடை திருநாளைக் கொண்டாடி மகிழ்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

Advertisment
pongal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe