'
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/pinarayi vijayan_1.jpg)
கேரள மாநில முதல்வராகத் தொடர்ந்து இரண்டாவது முறையாக இன்று (20/05/2021) பதவியேற்றுக்கொள்கிறார் பினராயி விஜயன். முதல்வர் பினராயி விஜயன் உட்பட 21 அமைச்சர்கள் மதியம் 03.00 மணிக்குப் பதவியேற்றுக்கொள்கின்றனர். திருவனந்தபுரம் சென்ட்ரல் ஸ்டேடியத்தில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் ஆளுநர் ஆரிப் முகமது கான் பதவிப் பிரமாணம் செய்துவைக்கிறார். பதவியேற்கும் முன் ஆலப்புழையில் உள்ள தியாகிகள் நினைவுச்சின்னத்தில் புதிய அமைச்சர்கள் மரியாதை செலுத்துகின்றனர்.
சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தசைலஜாவுக்கு வாய்ப்பு தராதது சர்ச்சையான நிலையில், முதல்வர் பினராயி விஜயனின் மருமகன் உட்பட 21 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow Us