கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நடூர் கண்ணப்பன் லே-அவுட் பகுதியில் தொடர் மழை காரணமாக நான்கு வீடுகள் இடிந்ததில் இடிப்பாடுகளில் சிக்கி 17 பேர் இறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் அந்த பதிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் கேரள அரசு தயாராக இருப்பதாகவும் ட்விட் செய்துள்ளார் பினராயி.