Advertisment

விபத்தில் சிக்கிய கேரள முதல்வரின் கார்!

Kerala Chief Minister car incident

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள வாமனபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது அணிவகுப்பு பாதுகாப்புடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் சென்ற பாதுகாப்பு வாகனங்களுக்கு முன்னால் ஸ்கூட்டர் ஓட்டிச் சென்ற பெண் ஒருவர் திடீரென குறுக்கே சென்றுள்ளார். இதனால் பாதுகாப்பு வாகனத்தில் இருந்த ஓட்டுநர் அந்த ஸ்கூட்டர் ஓட்டுநர் மீது மோதாமல் இருக்க திடீரென பிரேக் பிடித்துள்ளார்.

Advertisment

இதனால் முதல்வர் பினராய் விஜயனின் கார் உட்பட பாதுகாப்பு அணிவகுப்பில் இருந்த ஐந்து வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் முதல்வர் பினராய் விஜயனின் கார் சிறிதளவு சேதம் அடைந்தது. நல்வாய்ப்பாக அவர் காயமின்றி தப்பினார். தனது பயணத்தைத் தொடர்ந்தார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயனின் பாதுகாப்பு வாகனங்கள் ஒன்றின்மீது ஒன்று மோதி விபத்தில் சிக்கிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
car thiruvananthapuram Kerala
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe