கஜா புயல் தமிழக டெல்டா பகுதிகளை தாக்கியதில் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. அவர்களின் வாழ்வாதாரமான பல விஷயங்கள் இந்த புயலில் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அதேபோல நிவாரணப் பொருட்களும் பெற்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பாதிப்பு குறித்து அண்டை மாநில முதலமைச்சரான பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில், கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டு வரும் தமிழக மக்களுக்கு கேரள மாநிலம் பக்கத் துணையாக இருக்கும். திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட மக்களுக்கு குடிநீர், தார்ப்பாய், மெழுகுவர்த்திகள், உலர்ந்த உணவுப் பொருட்கள், புத்தாடைகள் அனுப்பி வைக்கப்படும். கேரள மாநில இயற்கைப் பேரிடர் மீட்பு மையம் இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்ளும் என்று பதிவிட்டுள்ளார். இதுப்போன்ற ஒரு இயற்கை பேரிடரில் கேரள பாதிக்கப்பட்டபோது, தமிழக மக்கள் திரளாக சென்று உதவியது குறிப்பிடத்தக்கது.
கஜா புயல் பாதிப்புக்கு உதவ முன்வந்த கேரள முதலமைச்சர்...
Advertisment
Advertisment
Follow Us