கேரள அமைச்சரவையில் மாற்றம்

Kerala cabinet reshuffle

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. முதல்வராக பினராயி விஜயன் இருந்து வருகிறார். இந்நிலையில், கேரள அமைச்சரவையில் இருந்து 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி ராஜு, துறைமுகங்கள் துறை அமைச்சர் அஹமது தேவர்கோவில் ஆகியோர் ராஜினாமா செய்துள்ளனர்.

இதற்கான கடிதத்தை முதல்வர் பினராயி விஜயனிடம் அளித்துள்ளனர். மேலும் இவர்களுக்கு பதிலாக கே.பி.கணேஷ் குமார் மற்றும் கடனப்பள்ளி ராமச்சந்திரன் ஆகிய இருவரும் புதிய அமைச்சர்களாக டிசம்பர் 29ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

cabinet Kerala minister
இதையும் படியுங்கள்
Subscribe