Advertisment

'முக்கிய அரசு பதவி நியமனங்களில் இனி காவல்துறை சரிபார்ப்பு கட்டாயம்' - கேரளா அதிரடி!

Advertisment

pinarayi vijayan

கேரள மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம் இன்று, அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் சில அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

Advertisment

அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், நல வாரியங்கள், மேம்பாட்டு ஆணையங்கள், கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தேவஸ்வம் போர்டுகளில் நியமிக்கப்படுவோரின் பின்புலத்தை காவல்துறையை வைத்துச் சரிபார்க்கக் கேரள அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பைவெளியிட்டுள்ள கேரள முதல்வர் அலுவலகம், ஊழியர் ஒருவர் பணியில் சேர்ந்த ஒரு மாதத்திற்குள் காவல்துறை சரிபார்ப்பு நடத்தி முடிக்கப்படவேண்டுமென்றும், சம்மந்தப்பட்டநிறுவனங்கள் அதற்கேற்றவாறு மூன்று மாதங்களில் விதிமுறைகளை மாற்ற வேண்டும் என்றும்கூறியுள்ளது.

Kerala Pinarayi vijayan police
இதையும் படியுங்கள்
Subscribe