ADVERTISEMENT

100 கோடி வரை கடன் ..நீர், மின்சாரத்திற்கு மானியம் - தடுப்பூசி உற்பத்தி மண்டலத்தை உருவாக்கும் கேரளா!

06:16 PM Sep 08, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

கேரள மாநிலத்தின் அமைச்சரவை கூட்டம், இன்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் திருவனந்தபுரத்தின் தொன்னக்கல் பகுதியில் உள்ள உயிர் அறிவியல் பூங்காவில் தடுப்பூசி தயாரிப்பு மண்டலத்தை ஏற்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசி உற்பத்தி மண்டலத்தில், நிறுவனங்கள் தங்களது தடுப்பூசி உற்பத்தி தொழிற்சாலைகளை அமைக்க 60 வருடக் குத்தகைக்கு நிலம் எனக் கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த தொழிற்சாலைகளுக்கு முத்திரை வரி மற்றும் பதிவு கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனக் கூறியுள்ள பினராயி விஜயன், அத்தொழிற்சாலைகளுக்கு நூறு கோடி ரூபாய் வரை கடனும், நீர் மற்றும் மின்சாரத்திற்கு மானியமும் மேலும் பல சலுகைகளும் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT