ஜெய்ஸ்ரீராம் என கோஷம் போட சொல்லி சிறுபான்மையின மக்களை மிரட்டி, அடித்து துன்புறுத்தும் கூட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு திரைத்துறையை சேர்ந்த 49 பிரபலங்கள் கடிதம் கடிதம் ஒன்று எழுதினர்.

Advertisment

kerala bjp spokes person replies adur gopalakrishnan

தமிழ் இயக்குனர் மணிரத்னம், மலையாள பிரபலம் அடூர் கோபாலகிருஷ்ணன், தயாரிப்பாளர் அபர்ணா சென், வரலாற்று ஆசிரியர் ராமச்சந்திர குகா, மேற்கு வங்க நடிகர் கவுசிக் சென் உள்ளிட்ட 49 பேர் அந்த கடிதத்தில் கையெழுத்திட்டிருந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக கேரளா பாஜக வின் மூத்த தலைவரும், செய்தி தொடர்பாளருமான கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இதுகுறித்து பேசியுள்ள அவர், "ஜெய் ஸ்ரீராம் முழக்கம் இந்தியா மட்டுமல்ல அண்டை நாடுகளிலும் ஒலிக்கும். அதனை கேட்க விருப்பம் இல்லாதவர்கள் தங்களது பெயரை ஸ்ரீஹரிகோட்டாவில் பதிவு செய்து நிலவு அல்லது வேறு எதாவது கிரகத்திற்கு சென்றுவிடுங்கள். இந்திய மக்கள் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிடவே வாக்களித்துள்ளனர். அவர்களின் இந்த முழக்கம் எப்போதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

ஒருவேளை தேவைப்பட்டால் அடூர் கோபாலகிருஷ்ணன் வீட்டின் முன்பும் இந்த கோஷம் ஒலிக்கும். இது ஜனநாயக உரிமை. இந்தியாவில் ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் போடக் கூடாது என்றால் வேறு எங்கு போய் கோஷமிடுவது" என தெரிவித்துள்ளார். ஜெய் ஸ்ரீராம் கோஷம் பிடிக்காதவர்கள் வேறு கிரகத்திற்கு செல்லுங்கள் என அவர் தெரிவித்துள்ளது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment