Advertisment

சபரிமலை விவகாரம்; கடும் அமளி காரணமாக சட்டமன்ற கூட்டம் ஒத்திவைப்பு...

ker

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தில் கேரள அரசுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் இன்ற காலை சட்டப்பேரவை கூடியதிலிருந்து எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனையடுத்து சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது. பேரவையில் முதலமைச்சர் பினராயி விஜயன் பேசிக் கொண்டிருந்த பொழுது, சபாநாயகர் இருக்கையை சூழ்ந்து கொண்டு சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சிகள்கோஷமிட்டனர். இதையடுத்து, கேரள சட்டப்பேரவை, நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Advertisment

assembly Kerala sabarimalai
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe