kerala

இந்தியாவில் கரோனாபாதிப்பு மோசமடைந்துள்ளது. நாடு முழுவதும் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கேரள மாநிலத்திலும் கரோனாபரவல் தீவிரமடைந்துள்ளது. அதிகம் கரோனா அதிகளவில் பாதித்த மாநிலங்களில் கேரளா இரண்டாமிடத்தில் உள்ளது. நேற்று (05.05.2021) ஒரேநாளில்41 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனாஉறுதியானது.

Advertisment

இந்தநிலையில், நேற்று ஊடகங்களைச் சந்தித்த கேரள முதல்வர் பினராயி விஜயன், "கேரளா கடுமையான சூழ்நிலையில் பயணித்துக்கொண்டிருக்கிறது. கரோனாபரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனாஉறுதியாகும் சதவீதம் குறையவில்லை. இந்தச் சூழ்நிலையால் மாநிலத்தில் மேலும் கட்டுப்பாடுகளை விதிக்கத் தேவை ஏற்பட்டுள்ளது" என தெரிவித்தார்.

அதன்தொடர்ச்சியாக, தற்போது கேரளாவில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மே 8ஆம் தேதி காலை 6 மணியிலிருந்து 16ஆம் தேதிவரை கேரளாவில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

Advertisment