zxz

உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகிறது. இதுவரை ஒரு கோடிக்கும் அதிகமானவர்களை இந்த நோய்த் தாக்கியுள்ளது. ஆறு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர்.

Advertisment

உலகின் பல நாடுகளில்கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனைத் தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்தியாவில் இதுவரை ஆறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்துள்ளது. கேரளாவை பொறுத்த வரையில், ஆரம்பத்தில் கரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகின்றது. மாநிலம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,999 ஆக உயர்ந்துள்ளது.

Advertisment

இதுவரை 60க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 105 வயதுடைய மூதாட்டி ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதால் இரண்டு வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வயதின் காரணமாக மருத்துவர்கள் அவரை தீவிரமாக கண்காணித்தனர். இந்நிலையில் தீவிர சிகிச்சையின் காரணமாக அவர் 9 நாட்களிலேயே குணமாகி வீடு திரும்பியுள்ளார். தற்போது அவர் ஒரு வாரம் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.