கேரளா நில அளவை இயக்குனராக இருப்பவா் ஐஏஎஸ் ஸ்ரீராம் வெங்கிடராமன். ஏற்கனவே மலப்புரம் மாவட்ட கலெக்டராக இருந்த இவா் தற்போது தலைமை செயலகத்தில் நில அளவை இயக்குனராக உள்ளாா். மது பழக்கம் உள்ள இவா் திருவனந்தபுரம் பெனிசில் கிளப்பில் நடந்த ஒரு பாா்ட்டியில் பெண் தோழி மாடலிங் வாபா பரோஸ் சுடன் கலந்து கொண்டு நள்ளிரவு 12.30 மணிக்கு இருவரும் ஃபுல் போதையில் சொகுசு காாில் சென்று கொண்டிருந்தார்.

Advertisment

p

காா், மியூசியம் அருகில்அங்குமிங்குமாக வளைந்து வளைந்து சென்றுகொண்டியிருந்த நிலையில் எதிரே அலுவலகத்தில் பணிமுடிந்து பைக்கில் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த சிராஜி பத்திாிக்கையின் நிருபா் பஷீா் மீது அந்த காா் மோதியது.

Advertisment

இதில் தூக்கி வீசபட்ட பஷீா் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்தாா். அப்படியும்காரை நிறுத்தாமல் சென்ற ஐஏஎஸ் அதிகாாியை துரத்தி சென்று பிடித்த போலிசாா் அவரை கைது செய்து மாஜிஸ்திரேட் முன் நிறுத்தினாா்கள். பின்னா் பூஜப்புரை மத்திய சிறையில் 15 நாட்கள் அடைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டாா்.

சிறைக்கு செல்லும் வழியில்திடீரென்று ஸ்ரீராம் வெங்கட்ரமணன் தனக்கு நெஞ்சு வலி இருப்பதாக கூறியதால் அவரை அரசு மருத்துவ கல்லூாி மருத்துவமனையில் அனுமதித்தனா். தற்போது போலிஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வருகிறாா்.

Advertisment

இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.