/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/binthu.jpg)
கேரளாவை சேர்ந்த பிந்து தங்கம் கல்யாணி என்பவர் சபரி மலைக்கு செல்ல முயன்ற போது, தடுத்து நிறுத்தப்பட்ட சூழலில், அவர் தமிழக கேரளா எல்லையில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் தனது மகளை பள்ளியில் சேர்க்க முயன்றதற்கு ஐயப்ப பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர்.
கேரளாவில் உள்ள அகழி பகுதியை சேர்ந்தவர் பிந்து தங்கம் கல்யாணி. 50 வயதை கடக்காத இவர், கடந்த மாதம் சபரி மலைக்கு செல்ல முயன்ற போது அவரை பம்பை பகுதியில் ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அவர் சபரிமலை கோயிலில் தரிசனம் செய்யவில்லை. இதனையடுத்து பிந்து ஆசிரியராக பணிபுரியும் பகுதியில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும் ஐயப்ப பக்தர்கள் சிலர் அவருக்கு எதிராக போராடி வருகின்றனர்.
இந்நிலையில் மீண்டும் சபரிமலை செல்வதற்காக , அவர் மாலை போட்டு உள்ளளர். இந்த சூழலில் கேரளா தமிழக எல்லை பகுதியில் உள்ள ஆனைக்கட்டி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் தனது மகளை சேர்க்க இன்று வந்து உள்ளார். அப்போது ஐயப்ப பக்தர்கள் சில பள்ளியை முற்றுகையிட்டு, அவரது மகளை சேர்க்க கூடாது என கூறினர். பிறகு விண்ணப்பத்தை அளித்து விட்டு பிந்து வீடு திரும்பினார். இது குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, தற்போது கல்வி ஆண்டு முடியாததால் , அவரை பள்ளியில் சேர்க்க முடியாது எனவும், கல்வி ஆண்டு துவங்கும் போது பள்ளியில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனர். ஆனால் பள்ளியில் சேர்த்தால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாக ஐயப்ப பக்தர்கள் தெரிவித்து உள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)