Advertisment

ஆளுநரை சந்திக்கும் கெஜ்ரிவால்... ராம்லீலா மைதானத்தில் பதவியேற்பு?

70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக கடந்த 8- ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி 21 மையங்களில் நேற்று காலை தொடங்கியது. இந்நிலையில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகளும் தற்போது வெளியாகியுள்ளது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 62 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும் பாஜக கட்சி 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கூட்டணி ஒரு இடங்களில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Advertisment

இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் வெற்றிபெற்ற எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று கெஜ்ரிவால் தலைமையில் காலை 11 மணி அளவில் நடக்க உள்ளது. சட்டமன்ற கட்சி தலைவராக அவரே தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவர் ஆளுநரை சந்தித்து தன்னை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை வைக்க உள்ளார். கெஜ்ரிவால் பிப்ரவரி 14 அல்லது 16ம் தேதி முதல்வராக மீண்டும் பதவியேற்பார் என்று சொல்லப்படுகின்றது. பதவியேற்பு விழா டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதற்காக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது.

Advertisment
Aravind Kejriwal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe