Kejriwal posed questions to the RSS organization

டெல்லி மதுபானக் கொள்கை மோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இரண்டாவது முறையாக சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததோடு 'மக்கள் நான் நேர்மையானவன் என நினைத்தால் எனக்கு வாக்களிக்கட்டும்; அதுவரை நான் முதலமைச்சர் பதவியில் இருக்க மாட்டேன்' எனத் தெரிவித்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

Advertisment

அதனைத் தொடர்ந்து டெல்லி அமைச்சரவையின் நீர்வளத்துறை உள்ளிட்ட 14 துறைகளை கவனித்து வந்த அதிஷியை டெல்லியின் புதிய முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் முன்மொழிந்தார். தொடர்ந்து எம்எல்ஏக்கள் ஆதரவுகளுடன் ஆதரவுடன் அதிஷி டெல்லியின் புதிய முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டு பதவியேற்றார். இந்நிலையில் மக்கள் குறை தீர்ப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய டெல்லி முன்னாள் முதல்வர்அரவிந்த் கெஜ்ரிவால், ஆர்எஸ்எஸ் அமைப்பை நோக்கிபலகேள்விகளை முன் வைத்துள்ளார்.

Advertisment

எதிர்க்கட்சிகளை முடக்க அரசு அமைப்புகளை ஒன்றிய பாஜக அரசு பயன்படுத்துவது குறித்து ஆர்.எஸ்.எஸ்-இன் நிலைப்பாடு என்ன? ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான அரசியல்வாதிகளை பாஜகவில் சேர்த்துக் கொள்வதற்கு ஆர்.எஸ்.எஸ்-இன் பதில் என்ன? ஆர்.எஸ்.எஸ்-இன் தயவு இனி பாஜகவுக்கு தேவையில்லை என்று பாஜகவின் தலைவர் ஜே.பி.நட்டா பேசியதற்கு ஆர்.எஸ்.எஸ்-இன் கருத்து என்ன? உள்ளிட்ட கேள்விகளை ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு அரவிந்த் கெஜ்ரிவால் வைத்துள்ளார்.