Kejriwal faces strong opposition for alleged about Yamuna river at delhi election

டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள், வரும் பிப்ரவரி 8ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. 70 தொகுதிகள் கொண்ட டெல்லியில் நடைபெறும் தேர்தலில் வெற்றி வெற்றிப் பெறுவதற்காக, ஆம் ஆத்மி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர முனைப்பில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயத்தில், இந்தியா கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மிக்கும், காங்கிரஸுக்கும் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யமுனை நீர்விவகாரம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறிய கருத்து டெல்லி தேர்தல் களத்தில் திருப்புமுனையாக அமைந்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி தேசிய ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முன்னாள் முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசுகையில், “டெல்லி, கீழ் ஆற்றங்கரை மாநிலமாக இருப்பதால், குடிநீருக்காக மேல் ஆற்றங்கரை மாநிலமான ஹரியானாவிலிருந்து வரும் தண்ணீரையே நம்பியுள்ளது. ஹரியானாவிலிருந்து பெறப்படும் தண்ணீரை டெல்லியில் மனித நுகர்வுக்குப் பயன்படுத்தப்படுகிறது. சமீபத்தில் ஹரியானாவிலிருந்து பெறப்படும் நீர் மிகவும் மாசுபட்டதாகவும், மனித ஆரோக்கியத்திற்கு மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்ததாகவும் உள்ளது.

டெல்லி மக்கள், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்திலிருந்து குடிநீரைப் பெறுகிறார்கள். ஆனால், ஹரியானா அரசு யமுனையிலிருந்து டெல்லிக்கு வரும் தண்ணீரில் விஷத்தைக் கலந்து இங்கு அனுப்பியுள்ளது. நமது டெல்லி வாரியத்தின் பொறியாளர்களின் விழிப்புணர்வால்தான் இந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. இல்லையென்றால், அதிக அளவிலான மக்கள் கொல்லப்பட்டிருப்பார்கள்” என்று கூறி குற்றம் சாட்டினார். அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் எதிர்வினையாற்றி வருகின்றனர்.

Advertisment

Kejriwal faces strong opposition for alleged about Yamuna river at delhi election

கர்தார் நகரில் நேற்று நடைபெற்ற பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “டெல்லியின் முன்னாள் முதல்வர் ஒருவர் ஹரியானா மக்கள் மீது அருவருப்பான குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார். தோற்றுவிடுவோம் என்ற பயத்தில், 'ஆம் ஆத்மியைச் சேர்ந்தவர்கள் பதற்றமடைந்துள்ளனர். ஹரியானா மக்கள் டெல்லியில் இருப்பவர்களிடமிருந்து வேறுபட்டவர்களா? ஹரியானாவில் வசிப்பவர்களின் உறவினர்கள் டெல்லியில் வசிக்கவில்லையா? ஹரியானா மக்கள் தங்கள் சொந்த மக்கள் குடிக்கும் தண்ணீரை விஷமாக்க முடியுமா? ஹரியானா அனுப்பும் தண்ணீரை டெல்லியில் வசிக்கும் அனைவரும் குடிக்கிறார்கள், அதில் இந்த பிரதமரும் அடங்குவர்” என்று கூறினார்.

இதற்கிடையில், ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி, யமுனை நதியில் தண்ணீரை தலை மேல் தெளித்து குடிப்பது போல் வீடியோ ஒன்றை வெளியிட்டு கெஜ்ரிவாலுக்கு பதிலளித்தார். மேலும், யமுனையில் விஷம் கலந்து இருப்பதாக கருத்து தெரிவித்த விவகாரத்தில் கெஜ்ரிவால் வரும் பிப்ரவரி 17ஆம் தேதி நேரில் ஆஜராகி பதிலளிக்க வேண்டுமென ஹரியானா நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.