Advertisment

“கடவுள் உங்களை மன்னிக்கமாட்டார்” - பிரதமர் மோடி மீது கெஜ்ரிவால் கடும் விமர்சனம்

Kejriwal criticizes PM Modi

டெல்லி மகளிர் ஆணையத்தின் முன்னாள் தலைவரும், ஆம்ஆத்மிகட்சிஎம்.பியுமானஸ்வாதிமாலிவால்,போலீசாரிடம்பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். இதுதொடர்பாகக்கடந்த 13ஆம் தேதி காலை ஸ்வாதிமாலிவால்போலீசாரைதொடர்புகொண்டு, டெல்லி முதல்வர் இல்லத்தில் அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிப்பட்ட உதவியாளர்பிபவ்குமாரால் தாக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில்,போலீசார்விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Advertisment

ஸ்வாதிமாலிவாலைதாக்கியதாக, அரவிந்த் கெஜ்ரிவாலின் தனிச் செயலாளர்பிபவ்குமார் மீது கடந்த 16ஆம் தேதி பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தபோலீசார், இந்தச் சம்பவம்குறித்துத்தொடர்ந்து விசாரித்து வந்தனர். இதனையடுத்து, டெல்லிபோலீசார்அரவிந்த் கெஜ்ரிவாலின் தனி உதவியாளர்பிபவ்குமாரைக்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில்,தாக்கப்பட்டதாகக்கூறும் ஸ்வாதிமாலிவால், பா.ஜ.க முகமாக இருக்கிறார் என்றும், பா.ஜ.கவின்சதித்திட்டத்தின் அடிப்படையில்தான் அவர்பொய்க்குற்றச்சாட்டை முன்வைக்கிறார் என்றும் ஆம்ஆத்மிகுற்றம் சாட்டி வருகிறது.

Advertisment

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் பெற்றோர் மற்றும் மனைவியிடம்போலீஸ்விசாரணை நடத்துகிறது என்று அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் தனதுஎக்ஸ்பக்கத்தில், ‘நான் என் பெற்றோர் மற்றும் மனைவியுடன்காவல்துறைக்காகக்காத்திருக்கிறேன். நேற்றுபோலீசார்எனது பெற்றோரை அழைத்து விசாரணைக்கு நேரம் கேட்டனர். ஆனால் வருவார்களா, வரமாட்டார்களா? என்பது குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை’ என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் தனதுஅலுவலகத்தில் இருந்துஒருவீடியோஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் மோடிக்கு ஒரு செய்தி மற்றும் வேண்டுகோள் வைக்கிறேன். நீங்கள் எனதுஎம்.எல்.ஏக்களைகைது செய்தீர்கள். ஆனால் நான் உடையவில்லை. நீங்கள் என்அமைச்சரைக்கைது செய்தீர்கள், ஆனால் உங்களால்என்னைக்கீழே தள்ள முடியவில்லை. நீங்கள் என்னைக் கைது செய்து சிறையில் அடைத்தீர்கள். நான் சிறையில் துன்புறுத்தப்பட்டேன்.

ஆனால் இன்று நீங்கள் எல்லா எல்லைகளையும் தாண்டிவிட்டீர்கள். என்னை உடைக்க நீங்கள் என் வயதான மற்றும் நோய்வாய்ப்பட்ட பெற்றோரை குறிவைத்தீர்கள். எனது தாயார் பல நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளார். நான் கைது செய்யப்பட்ட நாள் அன்று அவர் மருத்துவமனையில் இருந்து திரும்பியிருந்தார். எனது தந்தைக்கு 85 வயது, அவருக்கு காது கேளாமை உள்ளது. என் பெற்றோர்கள் குற்றவாளிகள் என்று நினைக்கிறீர்களா? கடவுள் உங்களை மன்னிக்க மாட்டார்” எனத் தெரிவித்துள்ளார்.

modi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe