ஜார்க்கண்ட் மாநிலம் நாக்பூரில் உள்ள பொக்காரா பகுதியைச் சேர்ந்தவர் உமேஷ் குமார் ஷாஹு(68). இவர் கடற்படையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளார். இவரது மனைவி மஞ்சு ஷாஹு(60). இவர்களது வீட்டில் 15 வயதுடைய சிறுமி ஒருவர், பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்துள்ளார்.
பணிப்பெண்ணாக வேலை பார்த்த சிறுமி சிறு தவறு செய்தாலும், வயதான தம்பதி அவரை அடித்தும் மற்றவர்களுடன் பேசுவதை தடுத்தும் துன்புறுத்தி வந்துள்ளனர். மேலும், இருவரும் வெளியில் செல்லும்போதெல்லாம் அந்த சிறுமியை வீட்டில் அடைத்துவைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதனை கண்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து குழந்தை உரிமை பாதுகாப்புக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த குழு, காவல்துறை உதவியுடன் அந்த சிறுமியை மீட்டனர். இதையடுத்து, குழந்தை உரிமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த சிறுமி காப்பகத்திற்கு அனுப்பப்பட்டார்.