தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், அரபிக்கடலில் 'கயார்' புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.
கிழக்கு மத்திய அரபிக்கடலில் நிலைகொண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் கோவா, கர்நாடகா, தெற்கு மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள மக்கள் கவனமுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மீனவர்கள் கடலுக்குள் செல்வதையும் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்துடன் காற்றடிக்க கூடிய இந்த புயல் இந்தியாவில் கரையை கடக்காமல் வளைகுடா பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.