வட மாநிலங்களை சேர்ந்த தலைவர்கள் அடிக்கடி ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கிக் கொள்வது என்பது வாடிக்கையான நிகழ்வு. தென் இந்தியாவை காட்டிலும் வட இந்தியாவில் இது மிக அதிக அளவு இருக்கும். அதே போன்றதொரு சம்பவம் தற்போது பீகாரில் நடைபெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் கௌஷல் யாதவ். இவர் நேற்று நடைபெற்ற அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் தொண்டர் ஒருவரிடம் தன்னுடைய காலை அமுக்கிவிடுமாறு சொல்லியுள்ளார்.
தொண்டரும் சட்டமன்ற உறுப்பினர் சொன்னதும், உடனடியாக அவருடைய காலை அமுக்கிவிட்டுள்ளார். இதை அருகில் இருந்தவர்கள் வீடியோ எடுத்துள்ளார்கள். இந்த காட்சிகள் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இவ்வாறு அநாகரிகமாக நடந்துகொள்ளலாமா என்று அந்த உறுப்பினருக்கு எதிராக அம்மாநில எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். இந்த வீடியோ தற்போது இணைய தளங்களில் வைரலாகி வருகின்றது.