Skip to main content

காஷ்மீரில் தீவிரவாத தாக்குதலில் தமிழக வீரர் சுப்பிரமணியன் வீரமணம்

Published on 15/02/2019 | Edited on 15/02/2019
s

 

காஷ்மீரில் புலவாமா மாவட்டம் அவந்திப்போராவில் துணை ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 38 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்றும்,  தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த சுப்பிரமணியன் இதில் வீரமரணம் அடைந்தார் என்றும் உள்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருப்பூர் சுப்பிரமணியன் தியேட்டருக்கு நோட்டீஸ்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023

 

tirupur subramaniam special shows issue

 

கடந்த தீபாவளியை முன்னிட்டு கார்த்தி நடித்த ஜப்பான், ராகவா லாரன்ஸின் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்', விக்ரம் பிரபுவின் 'ரெய்டு', சல்மான் கானின் 'டைகர் 3' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகின. இதில் தமிழகத்தில் ஜப்பான் மற்றும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படக்குழு சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டதால் தமிழக அரசு ஒரு நாளைக்கு 5 காட்சிகள் என காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 1.30 மணிக்கு முடிக்க அனுமதி வழங்கியது. அதன்படி காட்சிகள் திரையிடப்பட்டது. 

 

ஆனால் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியனுக்கு சொந்தமான, திருப்பூர் ஸ்ரீ சக்தி சினிமாஸ் திரையரங்கில், சல்மான் கானின் 'டைகர் 3' படம் அரசு அனுமதியின்றி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டதாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு புகார் வந்துள்ளது. இதன் அடிப்படையில், அதிகாரிகள் அங்கு விசாரணை நடத்தினர். அப்போது அனுமதியின்றி 6 சிறப்புக் காட்சிகள் திரையிடப்பட்டது தெரிய வந்துள்ளது. 

 

இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு திரையரங்க உரிமையாளருக்கு மாவட்ட கலெக்டர் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 

 

 

Next Story

செப்டம்பர் 25இல் மதிமுக ஆர்ப்பாட்டம்

Published on 23/09/2023 | Edited on 23/09/2023

 

MDMK on September 25

 

மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே புதிய வந்தே பாரத் விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்திய ரயில்வே சார்பில் இயக்கப்படும் இந்த அதிநவீன ரயிலை பிரதமர் மோடி நாளை (செப்டம்பர் 24) தொடங்கி வைக்கிறார். திருநெல்வேலியில் இருந்து காலை 6 மணிக்குப் புறப்படும் ரயில் சென்னை எழும்பூருக்கு மதியம் 1:50 மணிக்குச் சென்றடையும். 652 கி.மீ தூரத்தை 7 மணி நேரம் 50 நிமிடங்களில் கடக்கிறது. இந்த அதிவிரைவு ரயில் விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். அதே சமயம் மறு மார்க்கமாகச் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 2:50 மணிக்குப் புறப்பட்டு இரவு 10:40 மணிக்குத் திருநெல்வேலிக்குச் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

அதே சமயம் இந்த ரயிலுக்கான கட்டண விவரங்களைத் தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டு இருந்தது. அதன்படி சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு ஏசி சொகுசு வகுப்புக்கு ரூ. 3,025 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதில் உணவு, ஜிஎஸ்டி, அதிவிரைவு கட்டணம், முன்பதிவு என அனைத்துக் கட்டணங்களும் அடங்கும். அதேபோன்று சாதாரண ஏசி சேர் கேர் கட்டணம் ரூ. 1,620 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி மதிமுக சார்பில் செப்டம்பர் 25 ஆம் தேதி கோவில்பட்டி நகரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டம் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தலைமையில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.