kasi vishwanathan temple and gyanvabi mosque

உத்தரப் பிரதேசதின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதா்ஆலயம் அமைந்துள்ளது. இதன் அருகே ஞான்வாபி மசூதி அமைந்துள்ளது. இந்நிலையில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதியை அகற்றி, முகலாய மன்னர்ஒளரங்கசீப்,ஞான்வாபிமசூதியைக் கட்டியதாகவும், மசூதி அமைந்துள்ள இடம் காசி விஸ்வநாதர் ஆலயதிற்குச் சொந்தமானது எனவும் வழக்கு தொடரபட்டது.

Advertisment

இந்த வழக்கை விசாரித்த வாரணாசி நீதிமன்றம்,ஞான்வாபி மசூதியில் அகழ்வாய்வு நடத்த உத்தரவிட்டது. உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம் மற்றும் மசூதி குழுஅலகாபாத் உயர்நீதிமன்றத்தில்மேல்முறையீடு செய்தன. இந்த மேல்முறையீட்டு மனு தற்போது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த நில சர்ச்சைக்கு இடையேகாசி விஸ்வநாதா்ஆலய நிர்வாகமும், ஞான்வாபிமசூதியை நிர்வகிக்கும் குழுவும்தங்களுக்குசொந்தமான நிலங்களை பரிமாற்றம் செய்துகொண்டுள்ளன.

Advertisment

காசிகாசி விஸ்வநாதா்ஆலய விரிவாக்கத்திற்கு நிலம் தேவைப்பட்டதையடுத்து, ஆலய நிர்வாகம்ஞான்வாபி மசூதி அருகேயுள்ள நிலத்தை கேட்டுள்ளது. இதனையடுத்து ஞான்வாபி மசூதி குழு 1700 சதுர அடியுள்ள நிலத்தை காசி விஸ்வநாதா்ஆலய நிர்வாகத்திற்கு வழங்கியுள்ளது. பதிலுக்குகாசி விஸ்வநாதா்ஆலய நிர்வாகம்,ஞான்வாபி மசூதியிலிருந்து சிறிது தூரத்தில் உள்ள 1000 சதுர அடி நிலத்தை வழங்கியுள்ளது.

ஞான்வாபி மசூதி குழு, காசி விஸ்வநாதர் ஆலயத்திற்கு வழங்கிய நிலம், உத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமானதாகும். அந்தநிலத்தைஉத்தரபிரதேச சன்னி மத்திய வக்ஃப் வாரியம்,ஞான்வாபி மசூதி குழுவிற்கு எந்தவித பணமறிமாற்றமும்இன்றி கால வரையற்ற குத்தகைக்கு வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.