உத்தரபிரதேச மாநிலத்தின் லக்னோ பகுதியில் காஷ்மீரை சேர்ந்த உலர் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் மீது தாக்குதல் நடைபெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையில் பழ விற்பனை செய்து வந்த 2 காஷ்மீரிகளை உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர். இதனை அவர்களே வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர். இந்த சம்பவம் லக்னோவில் நேற்று மாலை 5 மணி அளவில் நடைபெற்றுள்ளது. மேலும் அந்த வீடியோவில் இவர்கள் காஷ்மீரிகள் என்பதால் தான் தாக்குகிறோம் என கூறியபடியே அந்த வியாபாரிகளை தாக்குகின்றனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக அந்த சம்பவத்தில் தொடர்புடைய ஒருவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
உத்தரபிரதேசத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட காஷ்மீர் வியாபாரிகள்: வைரலாக வீடியோ...
Advertisment