Skip to main content

இந்தியா தோல்வி: ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் மீது தாக்குதல்? - கல்லூரிக்கு விரைந்த பஞ்சாப் போலீஸ்!

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

INDIA VS PAKISTAN

 

இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி நேற்று (24.10.2021) நடைபெற்றது. இந்தப் போட்டியில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி, அபார வெற்றி பெற்றது. உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் இந்தியாவை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.

 

இந்தநிலையில், பஞ்சாப் மாநிலம் சங்ரூரில் உள்ள பாய் குருதாஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரியில், இந்திய அணி தோல்வியடைந்ததையடுத்து, காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்களை உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்த சிலர் இரும்பு கம்பிகளால் தாக்கியதாக கூறப்படுகிறது. 

 

காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதை ஒரு மாணவர் ஃபேஸ்புக்கில் நேரலை செய்ததாகவும், பின்னர் பஞ்சாப் மாணவர்கள் குறுக்கிட்டு காஷ்மீர் மாணவர்களை தாக்கியவர்களை தடுத்து நிறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது.

 

காஷ்மீர் மாணவர்கள் தாக்கப்பட்டதாக தகவல் வெளியானதையடுத்து, பஞ்சாப் காவல்துறை  பாய் குருதாஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி கல்லூரிக்கு விரைந்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுவரை இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முன்னாள் முதல்வரைத் தோற்கடித்த சிறை கைதி; வியப்பில் ஆழ்த்திய தேர்தல் முடிவு

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
Engineer Rashid won by defeating Omar Abdullah in parliamentary elections
உமர் அப்துல்லா

18வது மக்களவைத் தேர்தல் இந்தியா முழுவதும் ஒவ்வொரு மாநிலமாக 7 கட்டங்களாக நடைபெற்ற நிலையில் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி வருகின்றன. மாலை 4 மணி நிலவரப்படி மொத்தம் உள்ள 543 தொகுதிகளில் 295 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 231 இடங்களிலும், மற்றவை 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.

இந்த நிலையில் ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் போட்டியிட்ட தேசிய மாநாட்டுக் கட்சி தலைவரும் ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஒமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். இவரை எதிர்த்து சுயட்சையாக போட்டியிட்ட  சிறை கைதி எஞ்சினியர் ரஷீத் என்று அழைக்கப்படும் அப்துல் ரஷீத் ஷே சுமார் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

Engineer Rashid won by defeating Omar Abdullah in parliamentary elections
எஞ்சினியர் ரஷீத்

கடந்த 2019 ஆம் ஆண்டு சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் பாராமுல்லா நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை எதிர்த்து சுயட்சையாக போட்டியிட்டார். ரஷித் சிறையில் இருந்தால் அவரது இரண்டு மகன்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில்தான் ரஷீத் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் உமர் அப்துல்லாவை வீழ்த்தி வெற்றி பெற்றிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அப்துல் ரஷீத் ஷே, வடக்கு காஷ்மீரில் உள்ள லாங்கேட் தொகுதியில் இருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story

“மோடியால் பிரதமர் அலுவலகத்துக்குக் கண்ணிய குறைவு” - மன்மோகன் சிங் தாக்கு

Published on 30/05/2024 | Edited on 30/05/2024
Manmohan Singh criticized Modi has dishonored the Prime Minister's office"

ஆறு கட்டத் தேர்தல் முடிந்த நிலையில், நாளை மறுநாள் (01-05-24) இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறவிருக்கிறது. அந்த வகையில், உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஒடிசா உள்ளிட்ட 57 தொகுதிகளில் ஏழாம் கட்டத் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. 

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் நடைபெறும் இறுதிக்கட்டத் தேர்தலையொட்டி பஞ்சாப் வாக்காளர்களுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர், “ஒரு குறிப்பிட்ட சமூகத்தைக் குறிவைத்து வெறுக்கத்தக்க பேச்சுக்களால் பிரதமர் அலுவலகத்தின் கண்ணியத்தை மோடி குறைத்துள்ளார். பிரதமர் மோடி இயல்பில் முற்றிலும் பிளவுபடுத்தும் மிக மோசமான வெறுப்பு பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார். அவர் என்னிடம் சில பொய்யான அறிக்கைகளையும் காரணம் காட்டியுள்ளார். நான் என் வாழ்நாளில் ஒரு சமூகத்தை மற்ற சமூகத்திலிருந்து தனித்து காட்டியதில்லை. 

விவசாயிகளின் தேசிய சராசரி மாத வருமானம் நாளொன்றுக்கு ரூ.27 மட்டுமே. அதே சமயம் ஒரு விவசாயியின் சராசரி கடன் ரூ.27,000 ஆகும். எரிபொருள் மற்றும் உரங்கள் உட்பட உள்ளீடுகளின் ஜி.எஸ்.டியுடன் இணைந்து அதிக விலையாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், நாட்டின் பொருளாதாரம் கற்பனை செய்ய முடியாத கொந்தளிப்பைக் கண்டுள்ளது. பணமதிப்பிழப்பு பேரழிவு, குறைபாடுள்ள ஜிஎஸ்டி மற்றும் கோவிட் -19 தொற்றுநோய்களின் போது வலிமிகுந்த தவறான நிர்வாகம் ஆகியவை ஒரு மோசமான சூழ்நிலையை விளைவித்துள்ளன. 

பெரும்பாலும் பஞ்சாபைச் சேர்ந்த 750 விவசாயிகள், டெல்லியின் எல்லையில் இடைவிடாமல் பல மாதங்களாகக் காத்திருந்து இறந்தனர். லத்திகளும், ரப்பர் தோட்டாக்களும் போதாது என்பது போல், நாடாளுமன்றத்தின் அரங்கத்தில் இருந்து பிரதமர் எங்கள் விவசாயிகளை ஒட்டுண்ணிகள் என்று வாய்மொழியாகத் தாக்கினார். அவர்களுடைய ஒரே கோரிக்கை, அவர்களைக் கலந்தாலோசிக்காமல் அவர்கள் மீது சுமத்தப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான். கடந்த பத்து ஆண்டுகளில், பஞ்சாப், பஞ்சாபிகள் மற்றும் பஞ்சாபியர்களை ஜாதி வெறியாக்குவதில் பா.ஜ.க அரசு எந்தக் கல்லையும் விட்டு வைக்கவில்லை” என்று தெரிவித்தார்.